வடமாகாண சபையில் ஊழல் இடம்பெறவில்லை! சீ.வி.விக்னேஸ்வரன்

வடமாகாண சபையில் நிதி ஊழல் மோசடிகள் இடம்பெறவில்லை என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “வடமாகாண சபையில் நிதிமோசடி இடம்பெற்றதாக கூறப்பட்டாலும், அவ்வாறான ஒன்று இடம்பெற்றிருக்கவில்லை.

பணியகத்தை நடத்துதல், கூட்டங்களின் போது அதிகளவான நிதி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனினும், நிதி ஊழல் இடம்பெறவில்லை” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Merken

Allgemein தாயகச்செய்திகள்