பிரித்தானியாவில் மற்றுமொரு பயங்கரவாத தாக்குதலா? ஆறு பேர் காயம்

அண்மைக்காலமாக பிரித்தானியாவில் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் பிரித்தானியாவின் Newcastle நகரில் கார் ஒன்றை மோதவிட்டு ஏற்படுத்தப்பட்ட விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நோன்பு பண்டிகை கொண்டாடியவர்கள் மீது வாகனம் ஒன்று மோதியதில் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவிலுள்ள விளையாட்டு மையத்திற்கு வெளியே இன்று காலை 9.14 மணியளவில் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 42 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இது பயங்கரவாத சம்பவம் என இன்னும் உறுதி செய்யப்படவில்லை என Northumbria பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.

என்ன நடந்தது என்பதை உறுதிப்படுத்த பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Newcastle மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்காக மேலதிக பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மசூதியில் இடம்பெற்ற தொழுகை நிறைவடைந்தவுடனே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக Newcastle மசூதி பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் லண்டனில் தொழுகை நிறைவடைந்து மசூதிக்கு வெளியே இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.