முதுகில் குத்தினார் மனோகணேசனும்?

தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் தமிழ் தேசியத்தை சிதைக்கும் ரணில் அரசின் சதி முயற்சிகளின் பங்காளியாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் செயற்படுவது அம்பலமாகியுள்ளது.ஒருபுறம் வடமாகாணசபை முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை வெளியே புகழந்து பேசிக்கொண்டு மறுபுறம் அவரிற்கெதிரான சதியின் பங்காளியாக மனோ கணேசன் உள்ளமையே தற்போது உள்ளமை அம்பலமாகியுள்ளது.

வடகிழக்கினில் ஏற்கனவே செயற்பட்டுவரும் அரசசார்பற்ற அமைப்புக்களினை புறந்தள்ளி தனது தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சின்; ஊடாக கொழும்பிலிருந்த தருவிக்கப்பட்டுள்ள சில சிவில் செயற்பாட்டாளர்கள் சகிதம் மனோ கணேசன் அரச சார்பற்ற அமைப்புக்களது சம்மேளனம் எனும் பேரினில் போலி அமைப்புக்களினை உருவாக்கவதற்கு முற்பட்டுள்ளார்.

ஏற்கனவே யாழ்ப்பாணத்தினில் மாவட்ட செயலகத்தினில் அரச அதிபர் சகிதம் போலி அமைப்பினை தயார்படுத்தியுள்ள அவர் தற்போது மட்டக்களப்பிலும் இவ்வாறான போலி அமைப்பொன்றை தயார்படுத்தியுள்ளார்.அத்துடன் வடகிழக்கின் அனைத்து மாவட்டங்கள் தோறும் இவ்வாறான அரச விசுவாச அமைப்புக்களினை தோற்றுவிப்பது மனோகணேசனின் பிரதான வேலையாக தற்போதுள்ளது.

இத்தகைய அமைப்புக்கள் ஊடக வடகிழக்கிலிருந்து வரும் நீதிக்கான நியாயமான குரல்களை தடுத்து தமது ஆதரவு கும்பல் மூலம் பொய்களை அவிழ்த்துவிடுவது அவரது நோக்கமாக இருக்கலாமென சமூக செயற்பாட்டாளரும் யாழ்.மாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களின் முக்கியஸ்தருமான கேசவன் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே கோத்தபாயவும் இத்தகையதொரு பொறிமுறையினை மேற்கொண்டிருந்த போதும் அது தோல்வியினில் முடிவுற்றிருந்தது.
உண்மையினில் முன்னர் கோத்தபாய வசமிருந்த அரசசார்பற்ற நிறுவனங்களை சமூக சேவைகள் அமைச்சு பின்னராக ஆட்சி மாற்றத்தின் பின்னராக பிரதமர் ரணில் வசமுள்ள அமைச்சின் கீழ் நேரடியாக கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்நிலையினில் புலம்பெயர் தமிழர்களை கவரவென அரசசார்பற்ற அமைப்புக்களினை பதிவு செய்யும் விவகாரத்தை மனோ கணேசன் வசம் ரணில் வழங்கியுள்ளார்.எனினும் இதுவரை இது தொடர்பிலான வர்த்தமானி அறிவிப்பு ஏதும் வெளியாகியிருக்கவில்லை. இந்நிலையினில் வழங்கப்பட்ட சிறிய அதிகாரத்தை பயன்படுத்தி புலம்பெயர் தமிழர்களிற்கு வலைவீசுவதற்கும் அரசிற்காதரவான பிரச்சாரங்களை முன்னெடுப்பதிலும் மனோ கணேசன் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.

குறிப்பாக புலம்பெயர் தமிழ் அமைப்புக்களினை உடைப்பதிலும் அவர்களை கொழும்பிற்கு தருவிப்பதிலும் போலி முகமூடி மனிதராக மனோகணேசன் உள்ளமை அம்பலமாகியுள்ளது.

வடகிழக்கினில் புலம்பெயர் தமிழர்கள் முதலீடு செய்ய எந்தவொரு அடிப்படை ஏற்பாடும் செய்யப்படவில்லை.அரசிற்கு இப்போது தேவையாக இருப்பது புலம்பெயர் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை உடைப்பதும் பிளவுபட வைப்பதுமே.அதற்கு முன்னர் லக்ஸ்மன் கதிர்காமர் முதல் சுமந்திரன் ஈறாக இப்பொழுது இலங்கையினிலிருந்து மனோகணேசன் போன்றவர்கள் தரகர்களாகியிருக்கின்றரென தெரிவிக்கின்றார் புலம்பெயர் செயற்பாட்டாளர் கரன்.
மனோகணேசனின் சர்வதேச பயணம்,அதில் கலந்து கொண்டு சந்தித்தவர்கள் தொடர்ந்து கொழும்புவருகை தந்து திரும்பியவர்கள் அனைவரும் இச்சதியின் கூட்டு முயற்சியாளராக இணைந்திருப்பதாக நம்பப்படுகின்றது.

Allgemein தாயகச்செய்திகள்