சுவிஸ் தமிழர் பூப்பந்தாட்டத் திருவிழா17.06.2017

சுவிஸ் Langanthal ல் தமிழர் பூப்பந்தாட்டத் திருவிழா
உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் சுவிஸ் கிளை நடாத்திய விளையாட்டுப் போட்டியானது கடந்த 17.06.2017 சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகி மாலை எட்டுமணி வரை கோலாகலமாக நடைபெற்றது. அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு தமிழர் கலாச்சார முறைப்படி மங்கல விளக்கேற்றி மிகவும் நேர்த்தியாக ஆண்கள் பெண்கள் சிறுவர் பெரியோர் என அனைவரையும் உள்வாங்கி ஐந்து பெரும் பிரிவுகளாக நடாத்தப்பட்டது. (Mens single U15,Mens single Open, Mens double Open,Ladies single Open, Mixed double Open,Mens single O40) போட்டியில் 50 போட்டியாளர்கள் பங்குபற்றி இருந்தார்கள்
சுவிஸ் கிளையின் புதிய நிர்வாகத்தில் இளைஞர்களின் பங்களிப்பும் பிரமிக்க வைத்தது. திரு தில்லைராஜன் அவர்கள் தொழிநுட்ப விடயங்களை கவனித்தார்
சுவிஸ் கிளை நிர்வாக உறுப்பினர்கள் திரு கண்ணன்( Lausanne), திரு சுஜீவன் (Luzern). திரு ஜோன் (Stans), திரு சுதாகர் (Zug), திரு ஜெகன் (Solothun), திரு ராஜன் (Aarau) ஆகியோர் இணைந்து இப்போட்டியை திறம்பட நடாத்தி இருந்தார்கள்
உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் (WTBF) ஆரம்பகர்த்தாவும் ஒருங்கிணைப்பாளருமான திரு கந்தையா சிங்கம் அவர்கள் உரை நிகழ்த்தி நிகழ்வை வழி நடத்தியது குறிப்பிடத்தக்கது. கந்தையா சிங்கம் அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது .
(WTBF) சுவிஸ் கிளையின் தலைவர் திரு சுஜீவன் தியாகராஜா தனது உரையின் போது எதிர்காலத்தில் வருடந்தோறும் இரண்டு போட்டிகளை நடத்துவது என்றும் ஒன்று மத்திய சுவிஸ் மாநிலத்திலும் மற்றயது வெவ்வேறு மாநிலங்களிலும் நடத்த எண்ணுவதாகவும் தெரிவித்தார். அடுத்த கட்டமாக இத் துறையில் சிறுவர்களை பயிற்சி கொடுத்து உருவாக்கும் எண்ணங்களையும் தெரிவித்தார்
நன்றி உரையினை திரு சுதாகர் அவர்கள் வழங்கினார். சுவிஸின் ஆதரவளித்த அனைத்து வர்த்தக உன்ளங்களுக்கும் தனித்த தனியே நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
மாலை எட்டு மணிக்கு இனிதே நிறைவேறிய விளையாட்டுப் போட்டி வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்குப் வெற்றிக் கிண்ணங்களையும் வெற்றிப் பதக்கங்களையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது
பரிசு பெற்றுக் கொண்டோர் விபரம்:
Mens single U15:
1. Nigilan (Zug)
2. Vinoshan Vijayatharan (Aarwangen)
3. Adshayan Vigneswaran (Egenkingen)
Mens single Open:
1. Nitharsan Thirunavukkarasu (Lausanne)
2. John Gnanachandran Gnanaseelan (Ennetbürgen)
3. Sujevan Thiyagarajah (Kriens)
4. Mathan Sabanayagam (Dottikon)
5. Luxmikanth Sinthathurai (Luzern)
Mens double Open:
1. Jeyakumar Thiyagarajah (Zug) / Pirakash Andavar (Zug)
2. Nitharsan Thirunavukkarasu (Lausanne) / Kannan Kathirkaman (Lausanne)
3. Rajakumar Seevaratnam (Zug) / Piraveen Selvakumar (Zug)
4. Antony Nesarajan (Entlebuch ) / Sujevan Thiyagarajah (Kriens)
Ladies single Open:
1. Sharmila Sangar (Lausanne)
2. Rebecca Gnanaseelan (Ennetbürgen)
3. Jeyaselvi Suseharan (Zürich)
Mixed double Open:
1. Rebecca Gnanaseelan(Ennetbürgen)/JohnGnanachandran Gnanaseelan (Ennetbürgen)
2. Sujevan Thiyagarajah (Kriens) / Jeyaselvi Suseharan (Zürich)
3. Kannan Kathirkaman (Lausanne) / Sharmila Sangar (Lausanne)
Mens single O40:
1. Rajakumar Seevaratnam (Zug)
2. Damodharan Thanikasalam (Zürich)
3. Siva Balasingam (Solothurn)
4. Tharmarajah Suthagar (Zug)

Merken

Allgemein விளையாட்டு