மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி 2017 யேர்மனி, Willich

யேர்மனியில் அமைந்துள்ள தமிழாலயங்களை இணைத்து தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு நடாத்தும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் 17.6.2017 சனிக்கிழமை அன்று யேர்மனியின் வில்லிச் நகரத்தில் ஆரம்பமாகி உள்ளது. இப்போட்டியில் யேர்மனியின் மத்திய மாநிலத்தில் உள்ள பல தமிழாலயங்களின் மாணவ மாணவிகள் மிக ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள். இந் நிகழ்வு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு பின்பு யேர்மனியக் கொடி மற்றும் தமிழீழத் தேசியக்கொடி அத்தோடு தமிழ்க்கல்விக்கழகத்தின் கொடியும் ஏற்றப்பட்டு ஆரம்பமானது.


இந் நிகழ்வில்
கடந்த (1982 – 1998) வரை 16 வருடங்கள் ஜெர்மனியின் வேந்தராக இருந்த ஹெல்முட் கோல் அவர்களின் மறைவைஒட்டி யேர்மனியக் கொடியும் தமிழீழத் தேசியக் கொடியும் அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு மறைந்த முன்னைநாள் யேர்மனியத் தலைவர் ஹெல்முட் கோல் அவர்களுக்கு அஞ்சலியும் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விளையாட்டு வீரவீராங்கணைகளால் விளையாட்டுத் தீபம் ஏற்றப்பட்டு மிகச் சிறப்பான அணிநடை நிகழ்வும் இடம்பெற்றது. அணிநடையில் ஈடுபட்ட வீரவீராங்கணைகள் தேசியக் கொடிகளுக்கு மரியாதை செலுத்தி அணிவகுத்துச் சென்றமை உணர்வுபூர்வமாக அமைந்தது.
பின் விளையாட்டுக்கள் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது. வெற்றியீட்டிய வீரர்களுக்கு பதக்கங்களும் வெற்றிக் கேடயங்களும் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.
பின் முதல் மூன்று இடங்களைப்பெற்ற தமிழாலயங்களுக்கும் வெற்றிக் கேடயங்கள் வழங்கப்பட்டது.

முதலாம் இடத்தை
மெயபூஸ் தமிழாலயமும்

இரண்டாமிடத்தை
முன்சன்கிளட்பாக் தமிழாலயமும்

மூன்றாமிடத்தை
நொய்ஸ் தமிழாலயமும் பெற்றுக்கொண்டன.

 

 

 

 

 

 

Merken