மாற்றம் வரும்போதுதான் , எம் இனத்தின் வாழ்வும் மீளும்

சில நுணுக்கமான விஷயங்களில் தெளிவுபடுவோம்……
#இது ஒரு செய்தி. இதன்பின்னால் பல செய்திகள் உள்ளதைக் காண்பீர்கள் …

//இலங்கையில் உள்ள மனிதாபிமான அமைப்புக்களை இணைத்து வெள்ளப் பெருக்கு மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை வதிவிட இணைப்பாளர் உணா மெக்கௌலி தெரிவித்துள்ளார்.//
–இது செய்தி.
இதன் விரிவாக்கம் இப்படி இருக்கு………..

சர்வதேச சமூகத்தின் உதவியுடன் இதற்கான திட்டத்தின் கீழ் தொடர்ந்தும் நிதி உதவியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிக்கையொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.“ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனம், தேசிய மற்றும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கள் ஆகியன இணைந்து பாதிக்கப்பட்டுள்ள மூன்று இலட்சத்து 74 ஆயிரம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே இதன் நோக்கமாகும்.

காலி, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அமைப்புக்கள் மூலம் நிவாரண உதவிகள் வழங்கப்படவுள்ளன.

#இதுவரையில் 19 நாடுகளில் பொருட்கள், விசேட நிதி முதலானவை அவசர நிவாரண உதவியாக கிடைக்கப் பெற்றுள்ளதுடன், சுகாதார வசதிக்கு தேவையானவற்றை வழங்குவதற்கு விசேட நிதி செலவிடப்படவுள்ளது” என உணா மெக்கௌலி மேலும் தெரிவித்துள்ளார்.

#சரி……. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கவேண்டும் என்பது வாஸ்தவம்தான்.
210க்கும், 250க்கும் இடைப்பட்ட மக்கள் இறந்திருக்கிறார்கள். 300 வரை காணாமல் போயிருக்கிறார்கள்.
இவர்களுக்குத்தான் இந்த ஐ.நா இடர்ப்பொறிமுறை.
எத்தனை நாடுகள் ஐ.நாவுடன் தொடர்போ, அத்தனை நாடுகளையும் இனைத்துச் செயல்படுகிறது.

#ஆனால்,
1,76,000 க்கும் அதிகமாக இந்தக் கூட்டுக்களவாணிக, உயிர்ப்பலி எடுத்ததும், நிவாரணம் இல்லை. அந்தஇனத்தின் வாழ்வை நிமிர்த்தும் செயல்ப்பாடுகள்கூட இல்லை. #இந்தஇனம் இன்றும் அழுதுகொண்டிருக்கிறது. #எந்தநாளும் போராட்டம். ஐ.நா கண்டுகொள்ளவில்லையே?
உண்மையில், முள்ளிவாய்க்கால் பேரவலத்தில்போது , பாண் கீ மூன் என்ற பக்கியின் சார்பில் கண்ணை மூடிக்கொண்டிருந்தது. #அதுவே, ஐ.நா தான் இந்தப் போரை வழிநடத்தி, தமிழினத்தை அழித்தது என்கிறேன் நான். #இந்த விபச்சாரச் சபை . இன்னமும் அதன் போக்கில் மாறவேயில்லை.

#காரணம்_என்ன?
போருக்குப் பின்னரான எமது மீளெழுச்சிக்கு, நாம் சரியான செயல்ப்பாடுகளைத் தேர்ந்தெடுக்கவில்லை. சரியான தலைமையையும் தேர்ந்தெடுக்கவில்லை. இன்னமும் நாம் தேர்ந்தெடுக்கவில்லை. மிகவும் பிழையான வழிகாட்டிகளை எம்மிடத்தில் வைத்திருக்கிறோம்.. #இவர்கள், சகட்டுமேனிக்கு, வெறும் சாக்கடைகள்
மாற்றம் வரும்போதுதான் , எம் இனத்தின் வாழ்வும் மீளும் .

Allgemein