ஐ.நா.பொதுச் சபை கூட்டத்துக்கு துணைத் தலைமை ஏற்கும் இலங்கை

ஐ.நா. பொது சபையின் 72 ஆவது அமர்வுக்கான துணைத் தலைவராக ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவர் ரொஹான் பெரேரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது கூட்டத் தொடருக்கு ஆசிய பசிபிக் வலயம் சார்பில் இலங்கை துணைத் தலைமை பொறுப்பை ஏற்கவுள்ளது.

இதேவேளை, கடந்த 2007 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆவது கூட்டத் தொடருக்கு இலங்கை இறுதியாக துணைத் தலைமை பொறுப்பை ஏற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Allgemein