பிரான்சில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்மொழி பொதுத்தேர்வு 2017

மொத்தம் 5 ஆயிரத்து 938 மாணவர்கள் இம்முறை தேர்வுக்குத்……….பிரான்சில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்மொழி பொதுத்தேர்வு 2017
தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தினால் பிரான்சில் நடாத்தப்படும் தமிழ்மொழி பொதுத்தேர்வு 2017 பிரான்சின் அரச தேர்வு மண்டபத்தில் (ஆயளைழn னநள நஒயஅநளெ 7 சுரந நுசநௌவ சுநயெn, 94110 யுசஉரநடை ) நேற்று 03.06.2017 சனிக்கிழமை பகல் 13.30 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுமுடிந்தது.
ஏற்பாட்டாளர்கள் முன்னிலையில் அகவணக்கத்தைத் தொடர்ந்து, தேர்வு நடத்துநர்கள் மற்றும் மாணவர்களால் கையொப்பமிடப்பட்டு தேர்வு வினாத்தாள்கள் திறக்கப்பட்டன.
தேர்வுகளில் முதல் பிரிவு மாணவர்கள் தேர்வை எழுதியபின் வெளியேறும்போது அடுத்த பிரிவுக்குரிய மாணவர்கள் உள்நுழைந்தார்கள் எனினும் எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு ஓழங்கமைப்புக்கள் செய்யப்பட்டிருந்தன. சகல தேர்வுகளிலும் பங்குபற்றிய மாணவர்களும் இரவு 19.00 மணிக்கு மண்டபத்தைவிட்டு வெளியேறினார்கள்.
பரிசின் புறநகர் பகுதி பாடசாலைகள் பிரத்தியேகமாக பேருந்துகளை ஒழுங்கு செய்து தமது மாணவர்களை அழைத்து வந்திருந்தனர்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினதும் அதன் உப கட்டமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் மண்டபத்திற்கு வெளியே மாணவர்களை ஒழுங்கமைப்பதில் நேர்த்தியாக ஈடுபட்டனர்.
வழமைபோன்று இம்முறையும் பிரான்சு அரச தேர்வு மண்டபத்தில் பெரும் எண்ணிக்கையான பெற்றோர்கள் வெளியில் காத்திருக்க வெளிநாட்டவர்கள் என்ன நடக்கின்றது என்று அதிசயிக்கும் அளவிற்கு தேர்வு மண்டபத்தை சூழ, காணும் இடமெல்லாம் எம் தமிழ் மக்கள் அலையெனத் திரண்டிருந்தனர். அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் காணப்பட்டது.
மண்டபத்தினுள்ள தமிழ்ச்சோலை பள்ளி ஆசிரியர்களும் செயற்பாட்டாளர்களும் தமது கடமைகளைத் திறப்பட நடாத்தியிருந்தனர்.
சுநுசு டீ தொடருந்தில் தமிழ் மக்களே பெரும் எண்ணிக்கையில் தேர்வு மண்டபப் பகுதியில் வந்து இறங்குவதைக் காணமுடிந்தது.
பிரான்சில் பாரிஸ் மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் புற மாவட்டங்களிலுமாக தோற்றவுள்ளதாக தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளை விட இம்முறை தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்ததாக ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.)

Allgemein