சீனாவின் யுத்தக்கப்பல் இலங்கையில்!!

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவுக்கும் சீன கடற்படை அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

சீனாவின் 150ஆவது படைப்பிரிவின் யுத்தக்கப்பல் ஒன்று நேற்று (01) இலங்கைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், குறித்த கப்பலின் கட்டளை அதிகாரி றியர் அட்மிரல் சென் ஹோ உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் குழுவினர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனை சந்திந்துள்ளனர்.

சீனாவின் யுத்தக்கப்பல் இலங்கைக்கு வருகைதந்ததன் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு வலுவடைந்துள்ளதாக ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், அனர்த்த நிவாரண பணிகளுக்கு சீனா வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு, இராஜாங்க அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

Allgemein