கலாச்சார படுகொலையே அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் செயற்பட காரணம்!!

அரசாங்கத்தின் கலாச்சார படுகொலையான யாழ். நூலக எரிப்பே மக்களை அரசிற்கு எதராக செயற்பட தூண்டியது என மகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். பொது நூலக அழிப்பு நாள் இன்று நினைவுகூரப்பட்டது. இந்தநிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தின் கலாச்சார படுகொலையான யாழ். நூலகம் எரிக்கப்பட்டு 36ஆவது ஆண்டாகவும் இம்முறை நினைவுகூரப்படுகின்றது.

குறித்த நூலகம் எரிக்கப்பட்ட போது யாழ். மாவட்ட அபிவிருத்தி தேர்தல் நடைபெற்ற நிலையில் ஏழு எம்.பிக்கள் கைது செய்யப்பட்டு பலாலிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சம்பவங்களே அரசாங்கத்திற்கு எதிராக மக்களை செயற்பட தூண்டியது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Allgemein