இராணு ஆதரவுடன் யாழில் குழப்பங்களை ஏற்படுத்திய ரவுடி சன்னா உட்பட பலர் கைது?

இராணுவப் புலனாய்வாளர்களின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு, ரவுடித்தனங்களை செய்து வந்த சன்னா என அழைக்கப்படும் பிரசன்னா மற்றும் தேவா, பிரகாஸ் உட்பட பலர் மன்னாரில் இரு்நது

இந்தியாவுக்கு செல்லும் போது இந்திய பொலிசாரால் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் மன்னாரில் உள்ள இராணுவ முகாமில் தங்கியிருக்கின்றார்கள் என எமது இணையத்தளம் சில மாதங்களு்ககு முன் ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.