யாழ். நோக்கி வேகமாக சென்ற வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!!

வவுனியாவில் நேற்று இரவு யாழ். நோக்கி வேகமாக சென்ற வாகனம் மோதி ஸ்தலத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

கனகராயன்குளத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் முள்ளியவளையைச் சேர்ந்த சி.கருணேஸ்வரன் எனும் 55 வயதான நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கனகராயன்குளம் ஏ9 வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தவர் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதையடுத்து குறித்த நபர் நிலைதடுமாறி பிரதான வீதியில் விழுந்துள்ளார்.

விழுந்தவர் மீது வவுனியாவிலிருந்து, யாழ். நோக்கி வேகமாக சென்ற ஹயஸ்ரக வாகனம் ஏறிச்சென்றதன் காரணமாக தலைசிதறி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிசார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Allgemein