மே30இல் இன்று 100ஆவது நாட்களை கடந்து தொடர் போராட்டம்

மே30இல் இன்று 100ஆவது நாட்களை கடந்து தொடர் போராட்டம் சிறிலங்கா அரசிடம் தங்கள் பிள்ளைகளை ஒப்படைத்த பெற்றோர்கள் 8வருடமாக தங்கள் பிள்ளைகளை தங்களிடம் கையளிக்க கோரி எத்தனையோ படிகள் ஏறி இறங்கியும் அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை அதன் பிறகு தங்கள் பிள்ளைகளை விடுவிக்கக்கோரி கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு முன்பாக இரவு பகல் இன்றி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர் அந்த போராட்டத்தின் 100ஆவது நாள் இன்று வடகிழக்கு 8மாவட்டங்களில் இருந்து 1000யிரக்கணக்கான மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மத குருமார்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் எல்லோரும் சேர்ந்து இன்று வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதை தடுப்பதற்கு சிறிலங்கா போலீசாரும் சிறிலங்கா ராணுவப்புலனாய்வு பிரிவினரும் நீதி மன்றத்தின் தடை உத்தரவை பெற்றுக்கொண்டு அந்த போராட்டத்தை தடுத்து வருகின்றார்கள்.அத்தோடு அந்த போராட்டத்தில் முன்மாதிரியாக செயற்பட்ட யோகராசா கலாரன்சினி சண்முகம்பிள்ளை சரோஜினி இரண்டு பெற்றோர்களை போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என நீதி மன்ற உத்தரவும் அவர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது அந்த பெற்றோர்களின் வேண்டுகோள் தங்களுக்கு எது நடந்தாலும் பரவாயில்லை இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுங்கள் என்று அழுதபடி கூறினார்கள்.இவர்களுக்காக புலம்பெயர் தமிழர்கள் நாங்கள் என்ன செய்யப்போகின்றோம்?

Allgemein