பேரெழுச்சியுடன் கிளிநொச்சியில் போராட்டம்

காணாமற் போனோரைத் தேடும் உறவுகள் வடக்கின் 4 மாவட்டங்களிலும், கிழக்கில் திருகோணமலையிலும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
முதலாவது தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் நூறாவது நாளை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்பாக மிகப் பெரும் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது உறவுகள் உணர்ச்சி மேலீட்டினால் ஏ-9 தேசிய நெடுஞ்சாலையை மறித்தும் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுடன் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர்.
Allgemein