இயற்கையின் சீற்றம் வெள்ளம் வடிந்தோடிய பிறகே வெளியில் வரும் சடலங்கள் கண்ணீருடன் மக்கள்!!

புளத்சிங்க பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்த மூவரின் சடலங்கள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை புளத்சிங்கள பிரதேசத்தின் கல்லப்பளை, கல்லத மலையின் ஒருபகுதி மண்சரிவுக்கு உள்ளாகியது.

இதன்போது இரண்டு வீடுகளும் அதில் வசித்தவர்களும் மண்ணுக்குள் புதையுண்டுள்ளனர்.
மண்சரிவுக்குள்ளான ஒரு வீட்டில் இருந்த ஐந்து பேரின் சடலங்கள் வெள்ளிக்கிழமை அன்றே கண்டெடுக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று குறித்த பிரதேசத்தில் வெள்ளம் வடிந்துள்ள நிலையில் மண்சரிவுக்குள் சிக்கியிருந்த மற்றைய வீட்டில் வசித்த 14 வயதான சிறுமியின் சடலம் வெளியில் தெரிந்துள்ளது.
இதனையடுத்து பிரதேச மக்கள் அப்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சிறுமியின் தாய் (30) மற்றும் தம்பி (04)ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மொத்தமாக இன்று 3 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Allgemein