2009ல் ஈழத் தமிழரைக் கொல்ல ஆயுதங்களுடன் வந்த இந்திய இராணுவ கப்பல் சிங்களவரைக் காப்பாற்ற 2017ல் நிவாரண பொதிகளுடன் வந்துள்ளது.
அப்போது (அன்று முதல் இன்று வரை) ஏன் இவர்கள் எமக்கு உதவ வரவில்லை……..
நிவாரணப் பொருட்கள், மருத்துவக் குழுவுடன் இந்தியக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது
இந்தியாவில் இருந்து நிவாரணப்பொருட்களுடன் இந்தியக் கப்பலொன்று இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இதேவேளை மற்றுமொரு கப்பலொன்று நாளை கொழும்பை வந்தடையுமென இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவி வழங்க இந்தியா முன் வந்துள்ள நிலையிலேயே குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கை மக்களுக்கு உதவி வழங்க முன்வருமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டதை உடனடியாக இந்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.
அதன் படி நிவாரணப் பொருட்களுடனான இரு இந்தியக் கப்பல்கள் ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
சீரற்ற காலநிலையி னால் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்வடைந்திருந்துள்ளது.
கடுமையான மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களினால் 99 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் இயற்கை அனர்த்தத்தால் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே இலங்கை மக்களுக்கு உதவி வழங்க இந்தியா முன் வந்துள்ளது. அந்தவகையில் நிவாரணப் பொருட்களுடனான இரு இந்தியக் கப்பல்கள் ஞாயிற்றுக் கிழமை இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அதிலொரு கப்பல் நிவாரணப்பொருட்கள் மற்றும் மருத்துவ குழுவுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது