மருத்துவ சிகிச்சைகளுக்காக அமெரிக்கா சென்றார் ரணில்!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் அவர் கடந்த சனிக் கிழமையே அமெரிக்கா சென்றுள்ளார் என பிரதமர் அலுவலகத்தில் உள்ள அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

மேலும், பிரதமர் இரண்டு வாரங்கள் அமெரிக்காவில் தங்கியிருப்பார் என்றும், மருத்துவ சிகிச்சைகளுக்காகவே அமெரிக்கா சென்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இம்மாதம் 28ஆம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளார் என்றும், அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர் அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாட திட்டமிட்டுள்ளார் என்றும் ஊடகங்களில் முன்னதாகவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Allgemein