இனவாதத்த துாண்டலுக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் !ஐனா சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் இணைப்பாளர் உனா மெக்கௌலி (Una McCauley) இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் கடந்த வாரம் வெசாக் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் இந்த வாரம் கௌதம புத்தரின் போதனைகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கை மக்கள், இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படவேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முஸ்லிம் சிவில் சமூகத்தின் தூதுக்குழு ஒன்று இன்று எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து முஸ்லிம் சமூகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Allgemein