வடக்கில் விளக்கேற்ற என்ன தடை ? ஈழத்தமிழனின் ஆய்வு!

வடக்கில் விளக்கேற்றி முப்படையினரை அசகெளரியப்படுத்த இடமளிக்கப்படமாட்டாதுஎன பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்

இது பற்றிய ஓர் ஆய்வு இல்லை இல்லை ஆதங்கம் என்றும் சொல்லலாம் தமிழர்கள் தனித்துவமாக தாங்கள் தங்கள் இனத்துக்காய் அதுவும் சிங்களனும் உலக நாடுகளும் இணைந்து அழிவுகண்ட மக்களுக்கு விளக்கேற்றினால் அது முப்படையினரை அசகெளரியமாம்

எத்தனை ஆயிரம் ஆயிரம் உயிர்களை முள்ளிவாய்காலில் முடக்கி நீங்கள் அழித்தபோது எங்கே போனது உங்கள் மனிதாவிமானம்

தமிழன் என்றால் நீங்கள் எதுவும் செய்து விடலாம் என்ற எண்ணமா…?

அன்றும் சரி இன்றும் சரி இனிவரும் காலத்திலும் சரி சிங்களத் தலைவர்களின் எண்ணத்தில் மாற்றம் வராது என்பது தெளிவான உண்மை அப்படியான நிலையில் சிங்கவனுக்கு பின் ஏன் நாம் இன்னும் நிற்கவேண்டும்

இறந்த உயிர்களுக்கு அவர்கள் தியாகத்திற்காய் நினைவேந்தல் விளக்கேற்றுவது என்பது எந்த நாட்டில் தடைக்குரிய சட்டம்

எமது இனத்துக்கு சமத்துவம் இல்லாத பட்சத்தில் நாம் பிரிந்து போவதைத்தானே நம்தலைவரும் மக்களம் விரும்பினார்கள்,

அப்படி இருக்க எம் இ‌னத்தை அழித்த துரோக கும்பல் அதாவது எந்த ஆட்சி வந்தாலும் சிங்களவர் குணம்மாறாது ,எமக்கென்ற தனித்துவம் கிடையாது, எமக்கு எந்தச் சுதந்திரமும் கடையாது என்பது எமக்குத்தெரிந்த ஒன்றல்லவா ?

அதனால் எமது அரசியல் வாதிகள் தங்கள் நிலையில் மாற்றம் கானவேண்டும் புதிய நடைமுறை உலக நாட்டுக்கு பறைசாற்றும் அளவுக்கு அவர்கள் செயல்பாடுவேண்டும் அல்லது நீங்கள் அரசியலில் இருந்து விலகுங்கள் இளம் சமூகம் தம்மால் முடிந்ததை செய்யும்

கொடுமை கூடக்கூட மீண்டும் ஓர் போரட்ட வடிவத்தை ஆளும் அரசுகள் சந்திக்கக்கூட நேரலாம் அதற்கு காரணம் சிந்திக்கத்தெரியாத அரசியல் வாதிகள் தொடர்வோம் ஆதங்கத்துடன் ஈழத்தமிழன் ஆய்வு

Allgemein