துயர்_சுமந்த_நாட்கள்_மே_18

நித்தம் எங்கள் வாழ்வில்
வலிகளோடு இன்னும்
வாழும் தமிழினம்
வரலாறு இருந்தும்
சிதைந்து போனதல்லவா..?

எல்லா மாதங்களும்
சோகம் நிறைந்தது என்றாலும்
#மே_மாதம் எங்கள்
வாழ்வின் இனத்தை
புதைத்த மாதம்
எங்கள் இதயங்களில்
இரத்தக் கண்ணீர்
வரவைத்த மாதம் …!!

புறமுதுகிட்டு,ஓடாது
வரும் பகையதை
எதிர்கொண்டு
எதிரியை எதிர்த்து
வலுவோடு போராடிய பொழுதும்

துணிவோடு போராட
தன்னம்பிக்கை இழந்த
பகைவன் வஞ்சம் வைத்து
பழிதீர்த்தான்
கொத்தனிக் குண்டுகளைப் போட்டு
கொடுரமாய் அழித்தான்

உலகமே சேர்ந்து
ஒரு இனத்தை அழித்ததே
உண்மைகளை புதைத்து
உலக அரங்கில் நடக்கிறது
நாடகங்கள் …

எத்தனைஉறவுகளை இழந்தோம்
எத்தனை உயிர்களை இழந்தோம்
எத்தனை எத்தனை பாலகர்களை இழந்தோம்…
தாய் இறந்தது அறியாத
பிஞ்சுக் குழந்தை
பசியால் பால் குடிக்க
தாயின் மார்பு தேடியதே
ஐயோ…!!நினைக்க நினைக்க
இரத்தம் கொதிக்கிறது
இன்னும் இதயத்தில்
தீயாய் எரிகிறது..!!

இத்தனை கொடுரமாய்
அழித்து விட்டோம் என்று
பெருமிதம் வேறு
அழிந்தது உயிர்கள் இல்லை
துளிர் விடும் மரங்களடா அவை

முள்ளிவாய்காலில்
முற்றுப்பெறவில்லை
நிலையிழந்தாலும்
நிலம் இருக்கிறது
தமிழீழ கனவு இன்னும்
எம் கண்களில் தெரிகிறது

தேசம் காப்பதாய்
சீரழிக்கிறாய் இன்றும்

கேப்பா புலவு
மக்களை நீயும்
கண்ணீரில் கரையவைத்தாய்
உணவின்றி நீரின்றி
துடித்த நாட்கள்
இன்னும் தெரிகிறது
மனக் கண்ணில்

வீடழித்து சொத்தழித்து
உயிரழித்துப் போனாய்
எங்கள் உணர்வுகளை
உன்னால் அழித்திட முடிந்ததா..??

இன்னும் இருக்கிறது
எங்கள் இதயங்களில்
அந்தோ தொலைவில் தெரிகிறது
எமக்கான விடுதலை

உலகம் முழுக்க
எங்கள் இனமடா
ஒன்று கூடினால்
ஈழம் மலருமடா,.,//

ஆக்கம் .ஜெசுதா யோ

Allgemein