விளக்கேற்றி நினைவேந்தல் செய்ய முடியாது!! அது படையினரை சீண்டும் செயலாம்:பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

வடக்கில் விளக்கேற்றி முப்படையினரை அசெகளரியப்படுத்த இடமளிக்கப்படமாட்டாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

அரநாயக்க பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக எமது இராணுவத்தினரை விமர்சிக்கின்றனர்.

அவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் இராணுவத்தினரின் சேவையை பாராட்ட வேண்டிய அளவிற்கு அவர்கள் பொறுப்புடன் செயற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிவாஜிலிங்கத்துடன் ஐந்து பேர் சுற்றி நின்று, விளக்கேற்றி இராணுவத்தினரை விமர்சிக்கின்றமை தொடர்பில் நாம் கவலையடைகின்றோம்.

ஆனால், முப்படையினர் பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தின் காரணமாகத்தான் அவரால் அவ்வாறு செயற்பட முடிகின்றது என அவருக்கு நினைவு கூர வேண்டும்.

புலம்பெயர் தமிழர்களின் பணத்தைப் பெறவே அவர் இப்படியான நாடகத்தை நடத்துகிறார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Allgemein