–நாகரீகமான போர் நடத்தியவர்கள் நாங்கள்–

பாரடாபார் எங்கள்தேசம் எரிந்துகிடப்பதை
பாவியர் செய்த கொடும் செயலைப்பாரடா
பலநாடு கூடிவந்து நாசம்செய்ததை பாரடா
நீதி சொல்லும் புண்ணியவான்களே பாருங்கள்
நிற்க்கதியான மக்களைப்பாருங்கள்
வளமானதேசம் சாம்பல் மேடானதைப்பாருங்கள்
பகைவனை அழிப்பதே எங்கள்படை
மக்களைக்காப்பதே எங்கள் செயல்
நாங்கள் நினைத்திருந்தால் சிங்களதேசம்
இதைவிட பலமடங்கு எரிந்து போயிருக்கும்
இருந்த இடம் தெரியாமலே போயிருக்கும்
அதை ஒருபோதும் எம்தலைவன் விரும்பாதவன்
நாகரீகமான போர்நடத்தியவன் தமிழ்த்தலைவன்
முள்ளிவாய்க்கால் என்பது முடிவல்ல முடிவல்ல
ஒரு இனத்தின் பேரழிவு பேரவலம் பெருந்துயரம்
ஓராயிரம் சாட்ச்சியங்கள் சான்றாக இருந்தும்
நீதி சொல்ல ஏன்தயக்கம் ஏன் கலக்கம்
மெளனம் கொள்வது ஏன் எதற்க்கு
செய்தவன்உன் அருகிலா,உனக்குவேண்டியவனா,
காலங்கள் கடந்தால் இத்துயரம்
மறந்திடுவோம் என்ற எண்ணமா?
ஒருபோதும் இல்லை அழியாத காயமிது
வருவோம் தமிழினம் ஒன்றாகி வருவோம்
அப்போது புரியும் தமிழன் பெருவீரம்
கவி- மயிலையூர்இந்திரன்

Allgemein