முள்ளிவாய்க்காலில்பொதுமக்கள்; மே 18 அஞ்சலி நிகழ்வு..கூறல்

வட மாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் குறித்த இடத்திற்கு இன்றைய தினம் சென்ற வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் குறித்த பகுதி மக்கள் இணைந்து நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மற்றும் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்விற்கு மக்களை அழைத்து செல்வதற்கான இலவச போக்குவரத்துக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.