இலங்கை இராணுவத்திற்கு எதிராக சாட்சியமளித்த அதிகாரிக்கு உயர் பதவி

இராணுவத்திற்கு எதிராக அமெரிக்காவில் சாட்சியமளித்த முன்னாள் இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்திற்கு எதிராக 100 பக்க சத்தியக் கடதாசி ஒன்றை அமெரிக்க அரசாங்கத்திற்கு வழங்கிய முன்னாள் இராணுவ உயர் அதிகாரிக்கு இவ்வாறு ராஜதந்திர பதவி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பதவி வழங்கப்பட்டவர் தென் மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் கடந்த தேர்தலில் தோல்வியடைந்த அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரச படையினருக்கு எதிராக சத்தியக்கடதாசி ஒன்றின் மூலம் சாட்சியமளித்தமைக்காக இந்த முன்னாள் அதிகாரிக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கொழும்பு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

Allgemein