ஆறாதகாயமடா இது தீராதசோகமடா..

 

வளமான வன்னிமண்
வளம்குன்றாத நீர்நிலைகள்
வயலோடுகாய்கறிகள்
உயர்ந்து நின்ற நிலப்பரப்பு
ஆடுமாடுகோழி எல்லாம்
காலாற மேய்ந்து நிற்க்கும்
அழகான சிறுகூடு
அதனுள்ளே பெருவீரம்
ஒன்றாகிப்பகைவந்து
முள்ளிவாய்க்கால் எரிந்ததுவோ
கண்பட்டுப்போனதுவோ
நிலம்குலுங்கு அழுததுவோ
பலநாடு கூடிநின்று
சதியோடு கூடிவந்து
தலைமேலே குண்டுபோட்டு
எரிதணலால் சுட்டெரித்து
ஒரு இனத்தைக்கொன்றொழித்த
கொடுஞ்செயல் நீதிதானோ?
பூவோடு பிஞ்சுகளும்
சிதறுண்டு போனகோலம்
பலகோயில் தெய்வங்களும்
பாத்திருந்த ஞாயமென்ன?
பிடிபட்டுப்போனவர்கள்
இன்னும் விடுபட்டுப்போகவில்லை
தாய்வீட்டு முற்றத்திலே
இன்னும் படைமுகாம் விலகவில்லை
தட்டிக்கேட்க்க ஆளுமில்லை
நீதிசொல்ல யாருமில்லை
உதவாத கூட்டணியும்
உதவாமல் போனவர்கள்
கட்டிலிலே உறங்கும் வயதில்
கதிரையில் என்னவேலை
மேமாதம் வருகுதெண்டால்
மேனி எல்லாம் நடுங்குதடா
முள்ளிவாய்க்கால் பெருவலியை
நினைத்து மனம் நோகுதடா
ஆறாத காயமடா
இது தீராத சோகமடா
ஆக்கம் — கவி- மயிலையூர்இந்திரன் (பிரான்ஸ்)

Allgemein