மறப்போமா எங்கள் வடுக்களை

சாவைத்திண்றவன்
ஆள நினைக்கின்றான்
தமிழன் நாங்கள்
விழாக்கள் கொண்டாடுகின்றோம் ”

நினைவுக் கேடயம் என்றும்
நினைக்க மறந்து வாழ்கின்றான் ”
ஒன்றரை லட்சம் உயிர்கள்
புதைத்த மண்ணில்
மே 18ல் உதைத்து விளையாடுவோம் பந்தை ”

மானம் கெட்டு வாழ்கின்ற சிலர்
தமிழன் மானத்தை விற்கின்றான் ”
ஏவல் கொண்டே எங்கள் உயிருக்கு
ஏலம் விடுகின்றான் அரசியல் அசிங்கம் ”

கருகிய புகை கலையவில்லை
கனவுகள் இன்னும் அழியவில்லை ”
பகையோடு நீ பந்தாடு நாளை உன்
தலையை பந்தாடுவோம் மறவாதே ”

ஈழவன் தாசன் “

Allgemein