யார் இந்த திரு.கந்தையா சுப்பிரமணியம்?.

இவரை எனக்கு நன்கு தெரியும்.யேர்மனி டோட்முண்டில் வசிப்பவர். டோட்முண்ட்மணியம் என்றால் பலருக்குத் தெரியும்.

கொள்கைப் பிடிப்பாளர் தனது கருத்தை அவர் கோபிப்பார் இவர் கோபிப்பார் எனக் கருதிச் சொல்லாமல் விடமாட்டார்.

தமிழாலயத்தின் ஆரம்பம் என்ன…? என்று இன்றைய செயல்பாட்டாளர்கள் தெரிந்து அறிந்திராத மனிதன்

ஆனால் இவரும் யேர்மனியில் தமிழாலயம் உருவாவதற்கு உழைத்தவர்களில் ஒருவர் ஆவார்  என்பது மறைக்க முடியாத உண்மை

இவர்பற்றி இங்குள்ள செயல்பாட்டாளர்களுடன் கருத்து முரண்பாடு கொண்டாரே தவிர என்றுமே விடுதலைய நோக்கி நின்ற பாதையிலிருந்து விலகியதே இல்லை இன்னமும் அது தொடர்கின்றது.பலராலும் நேசிக்கப்படுபவர்.

இறைபக்தி உடையவர் ஆன்மீகவாதி. டோட்முண்ட; சிவன் கோவிலின் வளர்ச்சிக்கு அயராது உழைப்பவர். அந்த ஆலயத்துக்காய்  நண்பர்களுடன் பூ தோட்டம் அமைத்து உள்ளவர் அந்தப் பூ தோட்டத்தை ஆலய குழுவும்  ஆலயம் வருபவர்களும் மணியம் பூ தோட்டம் என அழைக்கும் அளவுக்கு  அவர் பணிகள் அங்குள்ளது

அது மட்டுமல்ல காண்டீபம் என்ற சஞ்சிகையை வெளியிட்டவர்.

ஒரு செயல்பாட்டுக்குப் பின்னால் நின்று கடுமையாக உழைக்கும் இவரை சிலர் அவதானிப்பதில்லை. அது தவறு . எங்கள் சமூகத்திற்காக உழைக்கும் மனிதர்கள் மதிக்கப்பட வேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு விழா நடத்த ஏற்படும் வேலைகளில் கடுமையாக உழைப்பவர்கள் பலர் கண்டறியப்படுவதில்லை. இலைமறை காயாக குடத்தில் இட்ட விளக்காக அவர்கள் இருந்துவிடுகிறார்கள்..

அனாலும் .உழைப்பாளிகள் அனைவரும் மேன்மையானவர்களே. இனிவரும் காலங்களிலாவது அவர்களை வெளிக்காட்ட வேண்டும். என்பது உண்மையல்லவா…?

யேர்மனியில் இயங்கிவரும் தமிழ்க் கல்விக் கழகம் இவர் யார் என்பதை நினைவில் வைத்துக் கொள்வதும்  அவசியம் ஆகும் காரணம்  இவர் பற்றிய மட்டுமல்ல புலம் பெயர்ந்தபின் ஆரம்ப கல்வி கட்டு அமைப்பு என்பதே  கூட டோட்முண் நகரில்தான் என்பது எனக்குத்தெரிந்தவரை இவையாவும்  இங்குள்ள செயல் பாட்டளர்களால் மறைக்பட்டுள்ளது.

இது நியாயமற்றது  ஏற்றக்கொள்ள முடியாதது  அடுத்தவன் செய்தபணியை  எடுத்தவன் தனதாக்கிய கதைகளை   நமாற்றிவையை   இனி என்றாலும் அறிந்து  உண்மையைகொண்டு வரலாறுகள் இருப்பது விரும்பத்தக்கது ஆகும்

அதற்கு இவர்களோடு வாழ்ந்தவர்கள் அரம்ப கட்டமைப்பில் உள்ளவர்கள் இவர்கள் பற்றி இவர்கள் செயல்பாடுபற்றி அறிந்தவர்கள் இன்னும் வாழ்கிறார்கள் அதனால் வரலாற்றை யாருமே இருட்டடிப்புச் செய்யாதீர்கள்.

கருத்து முரண்பாடு கொண்டவனாக இருந்தாலும் அவர்களும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை தோளில் சுமந்தவர்கள் என்பதை மறக்கவே கூடாது.

இவர் தனது செயல்பாடுகளில் ஒன்றாக தமிழ் ரைம் சஞ்சிகையின் ஆசிரியராக தனது பணியைத் தொடருகிறார்.

பன்முனைச் செயல்பாட்டாளராகிய திரு. கந்தையா சுப்பிரமணியம் அவர்களைப் பற்றிய சிறு குறிப்பினையும் புகைப்படத்தினையும் இங்கே பதிவு செய்து மனமகிழ்ச்சியுடன் வாழ்த்தி பெருமை கொள்கிறேன்.

உண்மையின் உரசலோடு   உங்கள் முன்
எழுத்தாளர் ஆய்வாளர் க. முருகதாஸ்

Merken