முள்ளிவாய்க்கால்_எண்ணச்சுவடுகள்

 

நாட்கள் நெருங்க
நெஞ்சில் பதை பதைப்பு
முள்ளிவாய்க்காலின்
எண்ணச்சுவடுகள்
இதயத்துள்
ரணமாக்கிப் போன காயங்கள்….

இன்னும் ஆறாத வடுக்களாய்
மருந்திட முடியா வலிகளாய்
எத்தனை அனாதைகள்
எத்தனை அங்கவீனர்
எத்தனை சொத்துக்கள்
எத்தனை சோகங்கள்
அப்பப்பா…

இன்னொரு ஜென்மம் போதாதே
இருண்ட தமிழர் வாழ்வு
தலைநிமிர்ந்திட
கொடிய அரசு கொட்டிய
கொத்துக் குண்டில்
மாண்டு போனதெ
எல்லாமே இங்கே…

எத்தனை ஆண்டுகள்
ஆனாலும்
நினைக்கும் அந்த நிமிடம்
வலிக்கும்
நாளானதே…

கண்ணீர் வந்து
சொல்லிச் செல்லுதே
மனச்சுமைகளை
தமிழர் சோகங்களை…

ஜெசுதா யோ