இலங்கையை நெருங்கியுள்ள மற்றுமொரு ஆபத்து!

இந்து சமுத்திரத்தில் பெருமளவான கழிவுகள் கலக்கப்படுவதால், சமுத்திர நீர் மாசமடைந்து இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பூகோளவியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன இது குறித்து கருத்து தெரிவிக்கையில், இந்தியா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளின் சில நதிகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் இந்து சமுத்திரத்தில் கலக்கின்றன.

அண்மையில் வெளியிடப்பட்ட வரை படம் ஒன்றின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கழிவுகள் இந்து சமுத்திர நீரில் கலப்பதன் காரணமாக இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புகள் ஏற்பட கூடிய வாய்ப்பு காணப்படுகின்றன.

இந்நிலையில், இந்து சமுத்திர நாடுகள் சர்வதேச நாடுகளின் சட்டத்திற்கு அமைய செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் என பேராசிரியர் அதுல சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Allgemein