விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியிலிருந்து படையினர் வெளியேற்றம்? கூட்டமைப்பின் இரகசிய திட்டம்

வடக்கில் விடுதலைப் புலிகளின் முக்கிய நிலைகளில் இருந்து படையினரை வெளியேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரசிய திட்டம் ஒன்று தீட்டப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, நந்திக்கடல், மட்டுவால், கேப்பிலாமடு, இரணைமடு புலிகளின் விமான ஓடுபாதை, முள்ளிக்குளம் உள்ளிட்ட முக்கிய புலிகளின் நிலைகளில் இருந்து படையினரை வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது ஆதரவாளர்களை பயன்படுத்தி தொடர் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த தொடர் போராட்டங்களின் மூலம் வடக்கில் நிலைகொண்டுள்ள படையினரை வெளியேற்ற திட்டமிட்டுள்ளனர்.

இதன்படி, விடுதலைப் புலிகளினால் நிர்வகிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் 15 முக்கிய நிலைகளில் இருந்து படையினரை வெளியேற்ற திட்டமிடப்பட்டள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Allgemein