தொழிலாளர் உழைப்பு!கவிதை ஜெசுதா யோ

 

உலகெலாம் பரந்து வாழும்
தொழிலாளர்களுக்கும்
அவர்கள் பட்ட வலிகளுக்கும்
நலன் பெற்ற நன்னாள்
உழைப்பாளர்களின்
உன்னத நாள்

முதலாளி வர்க்கத்தின்
கொத்தடிமைத்தனத்தின்
வரையறையற்ற நேர உழைப்பில்
கொதித்தெழுந்த
தொழிலாளர் தொடர் போராட்டங்களின் சமிக்சையாக
கிடைத்த வெற்றித் திருநாளே
மே தினம் ஆகும்

ஆஸ்ரேலியாவில் விடியல் கண்ட
அந்த நன் நாள் உலகம் முழுக்க
வியாவித்து தொழிலாளர்களிடையே
வருடா வருடம் கொண்டாடப்படுகிறதே
மே முதலாம் திகதி

இன்று வரை
சுரண்டப்பட்டு
சூரையாடப்படுகிறது
தொழிலாளர் உழைப்பினை
இந்த முதலாளித்துவமே

அடிமைத்தனத்தை உடைத்து
தங்களுக்கென்று ஒரு தனித்துவத்தை
ஏற்படுத்தி விடுமுறை நாளாக
கொண்டி வருவது உலகமே

உழைப்பு இவர்களின் உயிராகி
பணம் இவர்களுக்கு தூரமாகி
நலம் பேணி வழமாக இருக்க
நாளும் பொழுதும்
உழைப்பை நம்பி வாழும் இந்த
தொழிலாளர்களை
நாமும் வாழ்த்துவோம்

                                                                   ஆக்கம்  ஜெசுதா யோ

Merken