கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு படையாளிகள் போராட்டம்

கிளிநொச்சியில் முன்பள்ளிகளில் கடமையாற்றும் சிவில் பாதுகாப்பு படையாளிகளை வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சிவில்பாதுகாப்பு திணைக்களத்தின் பண்ணைகள் அமைந்துள்ள காணிகளை சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு வழங்கக் கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கல்விக்கொள்கைகளுக்கு மாறாக முன்பள்ளிகளை சிவில்பாதுகாப்புத்திணைக்;களம் நிர்வகித்து வருகின்றது.

இந்நிலையில், குறித்த முன்பள்ளிக்கட்டமைப்பை வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவேண்டுமென பல்வேறு தரப்புக்களாலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதுடன் வடமாகாண சபையிலும் இதுதொடர்பான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந் நிலையில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பண்ணைகள் அமைந்துள்ள காணிகளை சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு வழங்கக் கோரியும் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி டிப்போ சந்தியில்இருந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தை சென்றடைந்து அரச அதிபருக்கு மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

Allgemein