ஆனந்தபுரப்பகுதில் விடுதலைப் புலிகளின் தொலைத் தொடர்பு கருவிகள்

 

முல்லைத்தீவு – ஆனந்தபுரப்பகுதியில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய தொலைத் தொடர்பு கருவியின் பாகங்கள் சிதைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது புதுக்குடியிருப்பு ஆனந்தபுரப் பகுதியில் விடுதலைப் புலிகளின் இராணுவ நிலைகள் மீது இலங்கை இராணுவத்தினர் சதுரவியூக தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது இலங்கைப்படைகளின் தாக்குதலை முறியடிக்க விடுதலைப் புலிகள் அதிஉச்சத் தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் காரணமாக இலங்கை இராணுவத்தின் முக்கிய தளபதிகள் உட்பட பல இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை இலங்கை படைகளின் உக்கிரத்தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல் தொடுத்த விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளுடன் சில விடுதலைப் புலி வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இராணுவத்தினரின் சதுரவியூக தாக்குதலை முறியடித்த விடுதலைப் புலிகள் தமது சமர்நிலையை இரட்டைவாய்க்கால் பகுதியில் மாற்றியதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை ஆனந்தபுரப்பகுதியில் நிகழ்ந்த இராணுவத்தாக்குதல்களின் அடையாளங்கள் அப்பிரதேசத்தில் தற்பொழுதும் காணப்படுகின்றது.

அங்கே விடுதலைப் புலிகளின் முக்கிய சமர்நிலைகள் அமைந்திருந்த பகுதிகளில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய தொலைத் தொடர்பு கருவிகள் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றன.

அவற்றுடன் தொலைத் தொடர்பு பரிபாசை அட்டைகள் மற்றும் இலகுவான முறையில் பயன்படுத்தும் முறைப்பட்டியல்களும் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சமரில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தளபதிகள் இலங்கை படைகளின் அதிஉச்சத் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல் வழங்கியதாகவும் கூறப்படுகின்றது.

Merken

Allgemein