வடகொரிய ஏவுகணை 10 நிமிடத்தில் தாக்கும் : ஜப்பான் எச்சரிக்கை

 

சியோல்: வடகொரியா ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டால், அது 10 நிமிடங்களில் ஜப்பானை அடைவதற்கு வாய்ப்பு உண்டு என அந்நாட்டு அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா, வடகொரியா இடையே பனிப்போர் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தாங்கள் வைத்திருக்கும் ஜூஷி ஆயுதங்களால் அமெரிக்க படைகளை, எங்கள் படைகளால் அழிக்க முடியும். இதில் ஒருத்தர் கூட மிஞ்சமாட்டார்கள் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் ஐப்பான் அரசு, தங்கள் நாட்டு மக்களுக்கு சிவில் பாதுகாப்பு வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது: வடகொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தினால், அது ஜப்பானை 10 நிமிடத்தில் வந்தடையும். அவ்வாறு நடந்தால் மக்கள் வலுவான கான்கிரீட் இடத்தை கண்டுபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஜன்னலுக்கு அருகில் யாரும் நிற்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

Allgemein