ஆனையிறவு. பல நூறு வேங்கைகளின் மாவீரத்தில் வெற்றி..!

 

போராட்ட வரலாற்றில் மிகவும் முக்கிய பங்கு வகித்த ஒரு களம் இந்த ஆனையிறவு. பல நூறு வேங்கைகளின் மாவீரத்தில் வெற்றி கொள்ளப்பட்ட நாள் இது.

2000.4.22 அன்று ஆனையிறவு கைப்பற்ற பட்டதாக அனைவருக்கும் ஒரு இனிப்பான செய்தியாக கிடைத்திருந்தது. வடக்கு, கிழக்கெங்கும் வரலாற்று வெற்றி கொண்டாட்டமாக இதனை பறை சாற்றியிருந்தனர். பல நூறு கரும்புலிகள், பலநூறு போராளிகள் என பலரின் இரத்த வரலாறாக இந்த படைத்தள வரலாறு எழுதப் பட்டது. பலவேறு டிவிசன் பாதுகாப்பு அரனைக் கொண்ட ஒரு தீவாக எதிரி இந்த படைத் தளத்தை வைத்திருந்தான். இதனால் பல் வேறு இணைப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் தமிழ் தரப்பு திண்டாடிய நிலையில் தலைவரினால் மிகவும் நேர்த்தியா வகுக்கப்பட்ட திட்டத்தில் பல் வேறு போராட்டத்தின் ஊடாக இந்த வெற்றியை விடுதலைப் புலிகள் பெற்றிருந்தனர்.

இந்த வெற்றி களிப்புகளுடன் புலிகளும் மக்களும் இணைந்திருக்க கிழக்கில் ஒரு பாரிய துரோக நடவடிக்கை கட்டியெழுப்ப அத்திவாரம் இடப்பட்டது. கருணா இந்த களத்தின் நாயகனாகவும், கிழக்கிலிருந்து வந்த ஜெயந்தன் படையணி இந்த வெற்றிகளுக்கு மிகவும் பங்காக இருந்த காரணத்தினாலும் பல போராளிகள் கருணா தான் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை மறை முகமாக வைத்திருந்தனர். ஆனால் கருணாவிற்கு இதில் ஏமாற்றம் காத்திருக்கவே கருணா தன் அணியுடன் எந்த முன்னறிவிப்பும் இன்றி் கிழக்கை நோக்கி நகர்வை தொடங்கி இருந்தார்.

இந்த செய்தியானது தளபதி பாணுவினூடாக தமிழ்ச் செல்வன் அண்ணனுக்கு அறிவிக்கப்பட்டு தலைவரிடம் கொண்டு செல்லப்பட்டது. தலைவர் கருணாவை தொடர்பு கொள்ள முற்பட்ட போதும் பயனளிக்காத நிலையில் 17 நாட்கள் நடைப் பயணத்தினூடாக கிழக்கை அடைந்திருந்தார் கருனா. ஆனாலும் தாங்கள் வந்து விட்டதாக ஒரு தகவலும் தலைமைச் செயலகத்திற்கு அறிவிக்க வில்லை. இங்கேயே துரோகத்திற்கான குழி தோண்டப்பட்டது.

ஆனையிறவு வெற்றியின் களமாக பார்த்தாலும் ஒர்ரு வரலாற்று களம் துரோகத்தின் குழிக்கு வித்திட்டது எனலாம்..

சுதர்சன் மட்டக்களப்பு

Allgemein