சற்றுமுன் வவுனியாவில் பிரபல வர்த்தகர் இரயிலில் மோதி பலி.

வவுனியாவில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் பலி வவுனியா நொச்சிமோட்டைப்பகுதியில் இன்று (20) மதியம் 12.35மணியளவில் ரயிலில் மோதி குருமன்காட்டு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நொச்சிமோட்டை பகுதியிலுள்ள ரயில் கடவையைகடக்க மற்பட்டபோது எதிரே வந்த ரயிலில் மோதியதில் மோட்டார் சைக்கிலில் சென்ற குருமன்காடு நகரசபை விடுதியில் வசித்துவந்த நாகலிங்கம் ஜீவராஜ் (ஜீவன்) 47வயதுடைய உயிரிழந்துள்ளார். எனினும் மோட்டார் சைக்கிலில் பின்னாலிருந்து சென்ற நபர் சிறுகாயத்துடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Allgemein