கொழும்பு மக்களுக்கு அதிர்ச்சி செய்தி!

தலைநகர் கொழும்பில் வசிக்கும் மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து வீழ்ந்தமையின் பின்னர் கொழும்பில் குப்பை சேகரிப்பானது சில பகுதிகளில் முடக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில், தற்போது சேகரிக்கப்படும் குப்பைகளை எங்கு கொட்டுவது என்று ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வொன்றை பெற்றுத்தரும் வரை, தாம் காத்துக்கொண்டிருப்பதாக, கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

மேலும், குப்பைகளை கொட்டுவதற்கு உரிய இடம் ஒன்று வழங்காவிட்டால், குப்பைகளை சேகரிக்கும் பொறுப்பில் இருந்து தாம் விலகப்போவதாகவும் நகர சபை அறிவித்துள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற மாபெரும் அனர்த்தத்தின் பின்னர் கொழும்பு மாநகர சபை மூலம் சேகரிக்கப்படும் 350 மெட்ரிக் தொன் குப்பைகளும் பிலியந்தலையின், கரதியான குப்பை சேகரிக்கும் பகுதியில் இடுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நேற்றைய தினம் அதிகளவில் குப்பைகள் கொண்டுவரப்பட்டமையினை அடுத்து அப்பகுதிமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதன் பின்னர், கடந்த இரண்டு நாட்களாக கொழும்பின் பல்வேறு பகுதிகளில் குப்பை சேகரிப்பானது பகுதியளவில் இடை நிறுத்தப்பட்டுள்ளமையால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Allgemein