வான் புலிகளின் பிரதித் தலைவர் வழக்கு எதுவுமின்றி விடுதலை!

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப்படையான வான்புலிப் பிரிவின் பிரதித் தலைவர் மஹாதேவன் கிருபாகரன் எனப்படும் குசாந்தன் வழக்கு தொடுக்கப்படாமலேயே தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

2014ம் ஆண்டு மேஜர் ஜெனரல் சுமித் மானவடுவின் தலைமையிலான குழுவினர், மலேசியாவில் வைத்து குசாந்தனை கைது செய்து நாட்டுக்கு அழைத்து வந்திருந்தனர்.

குசாந்தன் பொரளை மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அனுராதபுரம், கட்டுநாயக்க மற்றும் கொழும்பு மீது புலிகள் வான் தாக்குதல் நடத்தியது, குசாந்தனின் திட்டத்திற்கு அமையவாகும்.

பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சிங்கள கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரே சிறையில் குசாந்தன் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

குசாந்தன் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் பிரிட்டனுக்கு சென்றுள்ளார். அவரது மனைவி பிரிட்டனில் வாழ்ந்து வருகின்றார்.

குசாந்தனுக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களையும் சுமத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குசாந்தன் எந்தவொரு நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படாத நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Allgemein