மரண அறிவித்தல் திரு கதிரேசு ஜெகப்பிரதாபன்

திரு கதிரேசு ஜெகப்பிரதாபன்

(சின்னத்தம்பி)

தோற்றம் : 23 ஏப்ரல் 1963 — மறைவு : 17 ஏப்ரல் 2017
யாழ். எழுதுமட்டுவாழ் வடக்கைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் உசனை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரேசு ஜெகப்பிரதாபன் அவர்கள் 17-04-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லையா மற்றும் கனகம்மா(படித்த மகளீர் குடியேற்றத்திடம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,

காயத்திரி(நெதர்லாந்து), மோகனதாஸ், டக்‌ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராசமணி, தியாகராசா, செல்வரட்ணம், தங்கராசா, பரமேஸ்வரி, யோகநாதன், சிவராசா, காலஞ்சென்றவர்களான சுந்தரராசா, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சசி வதனி அவர்களின் அன்பு மைத்துனரும்,

றயீபன்(நெதர்லாந்து) அவர்களின் அன்பு மாமனாரும்,

சரிஷா(நெதர்லாந்து) அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-04-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணி முதல் மு.ப 10:00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எழுதுமட்டுவாழ் வடக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
உசன், மிருசுவில்,
இலங்கை.
தகவல்
றயீபன்(மருமகன்), குமரேசன்(பெறாமகன்)
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி:     +94779272618
– — இலங்கை
செல்லிடப்பேசி:     +94768823377

 

Allgemein