தாஜூடினின் கொலையில் திடீர் திருப்பம்: முக்கிய பிரமுகரின் மனைவி விரைவில் கைது?

இலங்கை அரசியலில் உள்ள முக்கிய பிரமுகரின் மனைவி விரைவில் கைதுசெய்யப்படவுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷவே இவ்வாறுகைது செய்யப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் கொலை தொடர்பிலேயே ஷிரந்தி ராஜபக்ஷ கைதுசெய்யப்படவுள்ளார்.

தாஜூடினின் கொலை இடம்பெற்ற போது அளரி மாளிகையிலிருந்து 41 தொலைபேசி அழைப்புகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன என குற்றப்புலனாய்வு பிரிவினர் இனங்கண்டுள்ளனர்.

குறித்த தொலைபேசி அழைப்புகள் ஷிரந்தியின் தனிப்பட்ட இலக்கத்திலிருந்தேமேற்கொள்ளப்பட்டுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே ஷிரந்தி ராஜபக்ஷ விரைவில் கைது செய்யப்படுவார் என கொழும்பு ஊடகம் ஒன்றுசெய்தி வெளியிட்டுள்ளது.

பிரபல ரகர் வீரர் வசிம் தாஜூடின் 2012ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி மர்மமுறையில் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Allgemein