மரண அறிவித்தல் திருமதி ஜெயக்குமார் துவாரகை

திருமதி ஜெயக்குமார் துவாரகை

(துளசி)

பிறப்பு : 29 நவம்பர் 1979 — இறப்பு : 14 ஏப்ரல் 2017
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயக்குமார் துவாரகை அவர்கள் 14-04-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், விநாயகமூர்த்தி மல்லிகாதேவி தம்பதிகளின் புதல்வியும்,

ஜெயக்குமார் அவர்களின் மனைவியும்,

அனுக்சயன், லக்சயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யுகாநந்தன், கயல்விழி, சதானந்தன், வதனி, குகானந்தன், ரதிகரன், கீர்த்தீசன், அருட்ஜோதி ஆகியோரின் சகோதரியும்,

தயாளினி, ரங்கநாதன், சுபாசினி, றொபியா ஆகியோரின் மைத்துனியும்,

அட்சயன் அவர்களின் சிறியதாயாரும்,

சங்கீர்த்தனா, யசிந்தன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 17-04-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் இணுவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
கயல்விழி ரங்கநாதன்(பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு
கயல்விழி ரங்கநாதன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33605612547
மல்லிகாதேவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776762673

Allgemein