மண்கும்பான் மத்தியில் அமர்ந்திருந்து அருள் பாலித்து வரும் சிவகாமி அம்மனின் புனரமைப்பு பணிகள் கடந்த பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில்- கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டு வந்த ஜந்தாவது மண்டபம் முழுமையாக இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிய வருகின்றது.
பரிஸிலிருந்து புனரமைப்பு பணிகளோடு சம்பந்தப்பட்ட ஒருவர் எமது இணையத்திற்கு தெரிவிக்கையில்-தரமற்ற கட்டுமான பணியினாலேயே மண்டபம் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவித்தார்.
புலம் பெயர்ந்து உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் வாழும் மண்கும்பான் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு -இவ்வாலயத்தினை புனரமைக்க முன் வரவேண்டும் என்ற பணிவான வேண்டுகோள் ஒன்றினையும்-அவர் எமது இணையத்தின் ஊடாக விடுத்துள்ளார்.
மண்கும்பானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய -இச்சம்பவத்தினால் இப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருப்பதாக மேலும் தெரிய வருகின்றது.