நியாயங்கள் சவக்குழியில்படுத்துறங்குகின்றன !கவிதை ஜெசுதா யோ

 

பணம் என்ற சொல்லுக்குப்பின்னால்
படுத்துறங்கிறது நியாயங்கள் எல்லாம்
அநீதி மட்டுமே தழைத்தோங்க
நீதிகள் எல்லாம் நடுவீதியில்
நாதியற்று நிற்கிறது…

மனங்கள் எல்லாம்
பிணங்களாகி
நடுநிலையிழந்து தவிக்கிறது
பக்கச்சார்பற்ற
நிலையிழந்து இன்று
எம் தேசம் சுடுகாடாகிறது…

எங்கோ இருந்து கொண்டு
ஒற்றை விரலில் ஆட்டிப்படைக்கும்
அரச அநீதிகள் எல்லாம்
மக்கள் மத்தியில்
திணிக்கப்படுகிறது…

சொத்திழந்து சொந்தமிழந்து
வீடின்றி வீதியில் நின்று
வாடிய போதும்
நியாயங்கள் அங்கே
பேச்சின்றி கல்லறைகட்டாத
சவக்குழிக்குள் சமாதியாகின..

உறவுகளைத் தொலைத்து
உணவின்றி உறவுகள் வாடியபோதும்
நியாயங்கள் எல்லாம்
கல்லறைக்குள் பதுங்கிக் கொண்டன.

வாயில்லை என்பதாலே
ஊமையான நியாயங்கள்
வேதனையைச் சொல்ல முடியாது
அநீதிக்குத் துணையாக
நியாயங்கள் எல்லாம்
சவக்குழியில் படுத்துறங்குகின்றன…

ஆக்கம்  ஜெசுதா யோ

Allgemein