சிரியாவில் 68 குழந்தைகளை பலி வாங்கிய கார் வெடிகுண்டு!

சிரியாவின் பல்வேறு முக்கிய பகுதிகளை பயங்கரவாத குழுக்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், அங்கு கடும் பாதிப்புக்கு உள்ளான பொதுமக்கள் மீட்கப்பட்டும், வெளியேற்றப்பட்டும் வருகின்றனர். இந்நிலையில், சிரியாவின் வடக்கு பகுதிகளான ஃபுவா மற்றும் கஃப்ராயா நகரங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பேருந்துகளின் மூலம் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர்.

மேற்கு அலெப்போ நகரின் ஒரு பகுதியில் இந்த பேருந்துகள் நிற்கவைக்கப்பட்டிருந்தன. அப்போது, வேகமாக வந்த கார் ஒன்று இந்த பேருந்துகளின் மீது மோதி வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இதில், பேருந்துகள் வெடித்துச் சிதறின. பேருந்துகள் இருந்தவர்கள் மற்றும் அருகில் பாதுகாப்புக்கு இருந்தவர்கள் என மொத்தம் 126 பேர் இந்தத் தாக்குதலில் பலியானார்கள். இதில், 109 பேர் அச்சுறுத்தல் நகரங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட அப்பாவி பொதுமக்கள். அதில், பிஞ்சுக் குழந்தைகள் 68 பேர்.

Allgemein