கணவரை சந்திக்க அனுமதிக்கக் கோரி நளினி மனு!!

வேலூர் சிறையில் இருக்கும் தனது கணவரைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று சிறைத்துறையிடம் அவரது மனைவி நளினி மனு அளித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன் வேலூர் சிறையில் இருந்து வருகிறார்.

அவரிடம் இருந்து மார்ச் 25-ம் தேதி இரண்டு செல்போன்கள், 3 சிம் கார்டுகள், ஒரு சார்ஜரை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சிறைக் கண்காணிப்பாளர், சிறைத்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு முருகன் அவரது உறவினர்களைப் பார்ப்பதற்குத் தடை விதித்து சிறைத்துறை டி.ஐ.ஜி முகமது அனிபா உத்தரவிட்டார்.

தற்போது தனது கணவரைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று சிறைத்துறையிடம் அவரது மனைவி நளினி மனு அளித்துள்ளார்.

Allgemein