அதிரடியாக குறைந்த விலைகள்! பிரித்தானியாவில் ஈசியா இனி வீடு வாங்கலாம்

பிரித்தானியாவில் இந்த வருடம் தொடக்கம் முதலே வீடுகளின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

பிரித்தானியாவில் இருக்கும் பிரபல வீட்டு சந்தை நிறுவனம் (Zoopla) ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், சராசரியாக இந்த வருடம் தொடக்கத்திலிருந்து வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மற்றும் ஸ்கார்ட்லாந்து ஆகிய எல்லா பகுதிகளிலுமே வீடுகளில் விலை இந்த வருடம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அதாவது, பிரித்தானியாவில் உள்ள மொத்த வீடுகளின் மதிப்பு £7.93 டிரில்லியனாக இருந்தது, இந்த 2017 ஆம் ஆண்டில் £29 பில்லியனாக குறைந்துள்ளது.

அதாவது கடந்த ஜனவரி மாதத்திலிருந்து £1,004 என்ற அளவில் ஒரு சராசரி வீடுகளின் விலை குறைந்துள்ளது.

பிரித்தானியாவில் வேல்ஸில் மட்டும் 0.4 சதவீதம் என்ற அளவில் வீடுகளின் விலை கடந்த மூன்று மாதத்தில் உயர்ந்துள்ளது.

பிரித்தானியாவில் கடந்த மூன்று மாதங்களில் வீடுகளின் மதிப்புகள் விகிதம் 0.41 சதவீதம் சரிந்துள்ளது.

ஸ்காட்லாந்தில் இது 0.08 சதவீதமாக சரிந்துள்ளது.

விலை உயர்வை பொருத்தவரை தெற்கு வேல்ஸின் Tredegar நகரில் உள்ள வீடுகளின் மதிப்புகள் 1.83 சதவீதம் உயர்ந்துள்ளன.

இங்கு ஒரு வீட்டின் மதிப்பு £102,062 ஆக தற்போது உள்ளது

அதே போல Ebbw Vale பகுதியிலும் இந்த வருட தொடக்கத்திலிருந்து 1.63 சதவீத உயர்வை சந்தித்துள்ளது.

அதே போல Leominster, Broadstairs, Godalming, Chepstow, Ossett பகுதிகளும் கட்டந்த மூன்று மாதங்களில் விலை ஏற்றத்தை சந்தித்துள்ளன.

Dorsetல் உள்ள Bridportல் வீடுகள் மற்றும் சொத்து மதிப்புகள் 2.06 சதவீதம் என்ற அளவில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

Morden, Northwood ,Waltham போன்ற லண்டனை சுற்றியுள்ள பகுதிகளும் கடும் வீழ்ச்சியை இந்த வருட தொடக்கத்திலிருந்து சந்தித்துள்ளன.

இது குறித்து வீட்டு சந்தை நிறுவன செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்த வருடத்தில் சிறிய அளவிலான வீழ்ச்சிகளை வீடுகளின் விலையில் கண்டுள்ளோம்.

வருடாந்திர விலையை பொருத்த வரை அது 1.44 சதவீதம் உயர்ந்தே உள்ளது.

வீடுகளின் மதிப்புகள் குறைந்துள்ளது முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு நல்ல செய்தியாகும் என அவர் கூறியுள்ளார்.

கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள நகரங்களில் வீடுகளின் விலை உயர்ந்துள்ளது.

Tredegar. Blaenau Gwent – 1.83 %

Leominster, Herefordshire – 1.74 %

Broadstairs, Kent – 1.69 %

Ebbw Vale, Blaenau Gwent – 1.63 %

Godalming, Surrey – 1.59 %

Chepstow, Monmouthshire – 1.51 %

Ossett, W Yorkshire – 1.49 %

Brixham. devon – 1.49 %

Beckenham, London – 1.44 %

Dunmow, Essex – 1.43 %

கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள நகரங்களில் வீடுகளின் விலை சரிந்துள்ளது

London – -0.24 %

South East – -0.37 %

North West – -0.37 %

North East – -0.43 %

East Midland – -0.43 %

West Midlands – -0.44 %

East Of England – -0.45 %

Yorkshire – -0.52 %

South West – -0.6 %

Wales – -0.08 %

Allgemein