வீரம் விளைந்த மண்ணில் !கவிதை ஜெசுதா யோ

 

வீரம் விளைந்த மண்ணில்
வேற்றுக் கிரகவாசிகள் போல
வந்தேறு குடிகளாய்
சிங்களம் வந்திட
சிதைந்து எம்தமிழ்
வீடிழந்து சொந்த நிலம்
புறிகொடுத்து
வீதியெங்கும் வீடுகளாய்
படுத்துறங்கி வாழும்
இந்த வாழ்க்கையொழிக்க
வரமட்டானா வீரன் ஒருவன்
வீறுகொண்டே
விரட்டியடிக்க
வேல்தனை தாங்கானா..?

புறமுதுகிட்டு
புறப்பட வழியொன்று
செய்யானா..?

காணாமல் போனதென
கதறியழும் உறவுகள்
கண்ணீரோடு வாழ்க்கை
கடந்து போகிறதே

ஒன்றா இரண்டா
ஆண்டுகள் பலகடந்து
இருக்கிறதா இல்லையா
தெரியாது தவிப்போடு
தவமிருக்கிறார்களே

மொழியும் அதன் உணர்வும்
எங்கள் உடலின் இரத்தங்களாக
நாடி நரம்பு நாளெங்கலெல்லாம்
பாய்ந்தோடுகிறது
இது தாய் தந்த பாலில் இருந்து
வந்த தாய்நாட்டுப் பற்றடா

எட்டப்பன் கூட்டம்
இன்னும் இருக்கிறது
சுயம் இழந்து
சோகை போன கூட்டம்

நிறம் மாறும் பூக்களாய்
மனம் மாறிய மனிதப்
பேய்கள்
மறத்தமிழன் என்ற பெயர்
மறந்து வாழும் மனிதர்

எல்லாம் ஒரு நாள் வெல்லும்
ஏங்கித்தவிக்கும் உள்ளங்கள்
கனவு பலிக்க
விழித்தபடி,காணும்
கனவாக நாம் இருக்கிறோம்

ஆக்கம் ஜெசுதா யோ

Merken

Allgemein