வானில் இருந்து கேட்கும் பயங்கர ஒலிகள் அபாய எச்சரிக்கையா?

உண்மையில் என்னதான் நடக்கின்றது என்பது தெரியாத பல விடயங்கள் எம்மைச் சுற்றி நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

இவற்றில் அதிகமான விடயங்களுக்கு விடைகள் எவராலும் கொடுக்க முடிவதில்லை. அதேபோன்று விடைகள் கூற முடியும் என்ற கேள்விகளுக்கும் பதில்கள் தரப்படுவதில்லை.

இவற்றில் அறிவியல் என்ற மட்டத்திலும் அடக்காமல், அமானுஷ்யம் என்ற வட்டத்திற்குள்ளும் வரையரை படுத்தாமல் ஆய்வில் இருக்கும் விடயங்களே பல.

அப்படியான ஓர் விடை கூற முடியாத விடயமே வானில் இருந்து கேட்கும் பயங்கர சத்தங்கள்.

உலகம் முழுவதும் வானில் இருந்து ஓர் சத்தம் கேட்கின்றது. 2011 ஆம் ஆண்டு முதல் இது தொடர்பில் மக்கள் அதிகம் பேசத் தொடங்கியதாக கூறப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து இவ்வாறான சத்தம் கேட்கும் போது அது பதிவு செய்யப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

எனினும் ஆய்வின் போது இந்த சத்தம் செயற்கையாக உருவாகின்றது என கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் மூலம் எது என்பது தொடர்பில் பதில் இல்லை.
அதே போல் இன்று வரை இந்த சத்தம் அன்றாடம் உலகில் எங்காவது ஓர் இடத்தில் அல்லது பல இடங்களில் கேட்கக் கூடியதாகவே இருக்கின்றதாக கூறப்படுகின்றது.

ஓர் விமானம் பறக்கும் போது எழும் சத்தத்தை விடவும் 10 மடங்கு அதிகமாக இந்த ஒலி கேட்கின்றது. எனினும் சத்தம் வரும் திசையில் கண்ணுக்கு அல்லது ராடர் கருவிகளுக்கும் எதுவும் சிக்குவதில்லை.

இதில் வியப்பான விடயம் எதுவெனில் 2016 இறுதி தொடக்கம் இவ்வாறான சத்தம் கேட்பது அதிகரித்து விட்டதாக மேலைத்தேய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக இந்த சத்தம் தொடர்பிலான ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் காரணம் இது வரையில் வெளியிடப்பட வில்லை.

இந்த சத்தம் வேற்றுக்கிரகங்களிடம் இருந்து வரும் பறக்கும் தட்டுகள் மூலமாக எழுப்பப்படுவதாகவும் சந்தேகம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட்ட பின்னரே இந்த பயங்கர ஒலி அபாய எச்சரிக்கையா என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும்.

 

Allgemein