சம்பந்தனையும் சுமந்திரனையும் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்

சம்பந்தனையும் சுமந்திரனையும் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்

மைத்திரி அரசாங்கத்துடன் இணைந்து சம்பந்தனையும் சுமந்திரனையும் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், அரசாங்கத்தை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறுவதற்கு காரணம், தான் மக்களுடைய பக்கம் நிற்பதாக காட்டி கொள்வதற்கே என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற சமகால அரசியல் நிலைமைகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவிக்கையில்,

தனியார் நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் மஹிந்த அரசாங்கத்தை வீட்டக்கு அனுப்பியதைப் போன்று இந்த மைத்திரி அரசாங்கத்தையும் வீட்டுக்கு அனுப்புவார்கள் என கூறியுள்ளார்.

எங்களுடைய வயதின் அளவுக்கு அரசியல் அனுபவம் உள்ளது என அடிக்கடி கூறும் சம்பந்தனுக்கு அரசாங்கம் ஏமாற்றும் என்பது இப்போது தான் தெரியுமா? சம்மந்தன் என்ன குழந்தையா? அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவது தொடர்பாக அவர் பேசக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Allgemein