இன்று பிரம்மாண்டமாக திறக்கப்படுகிறது கட்டுநாயக்க விமான நிலையம் !

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், திருத்தியமைக்கப்பட்ட விமான ஓடு பாதை இன்று திறந்துவைக்கப்படவுள்ளது.

குறித்த ஓடுபாதையில் இன்று பகல் 12.30 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அண்மையில் கொள்வனவு செய்த யு.எல்.1162 விமானம் தரையிறங்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஓடுபாதையானது சுமார் 50 மில்லின் அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் அmமைக்கப்பட்டுள்ளதுடன், இதன்மூலம், ஏ-380 எயார் பஸ் ரக விமானங்களும் தரையிறங்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என சிவில் விமானத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Allgemein